சென்னை அடுத்து பையனூரில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு 100 ஏக்கர் நிலத்திற்கான அரசாணையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது பேசிய அவர்,” பெப்சியில் மொத்தம் 24 உறுப்பினர்கள் உள்ளார்கள். அதில் 21,000 பேர் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருக்கிறார்கள். இரண்டரை லட்சம் ரூபாய் ஒரு உறுப்பினர் கட்டவுள்ள நிலை உள்ளது. அதில் கட்ட முடியாமல் உறுப்பினர்கள் நிலை குறித்து அனைத்து நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்தினோம்.

அதில் விஜய் சேதுபதி ஒரு உறுப்பினருக்கு 50,000 வீதம் 250 உறுப்பினர்களுக்கு ஒரு கோடியே 30 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார். முதலில் இரண்டு லட்சம் ரூபாய் வீடு கட்டும் 250 உறுப்பினர்களின் கணக்கில் விஜய் சேதுபதியின் பணம் வரவு வைக்கப்படும்.  இந்த உதவியை வழங்கிய அவருக்கு சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதோடு முதலில் அமையும் குடியிருப்பு “விஜய் சேதுபதி டவர்” என்று அழைக்கவும் முடிவு செய்துள்ளோம்”. என்று கூறியுள்ளார்