இந்தியாவில் தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி போஸ்ட் ஆபீஸில் தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில் மொத்தம் 44,228 காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 3,789 காலி பணியிடங்கள் இருக்கிறது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு 18 முதல் 40 வயது உள்ளவர்கள் வரை விண்ணப்பிக்கும் நிலையில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்று திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

இதில் தபால் அலுவலர் பணிக்கு மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை சம்பளமும், உதவி தபால் அலுவலர் பணிக்கு ரூ‌. 10,000 முதல் ரூ.24,470 வரையும் சம்பளமும் வழங்கப்படும். இந்த பணிக்கு 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணிக்கு https.//indiapostgdsonline.gov.in/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கு பொது பிரிவினருக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். அதேசமயம் எஸ்சி, எஸ்டி, மாற்று திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணம் கிடையாது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5 ஆகும்.