மயிலாடுதுறையில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர் தேர்வுக்கான நேர்காணல் ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இப்பணியிடத்தில் தேர்வாகும் தேர்வாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் பாலிசியின் பிரிமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இந்த நேர்காணலில் பங்கேற்க இருப்பவர்கள் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் புகைப்படம் எடுத்து வர வேண்டும்.

மேலும் கட்டாயம் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், 18-50 வயதிற்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். இதுதவிர ஆயுள் காப்பீடத்தின் முன்னாள் முகவர்கள், அங்காடி ஊழியர்கள், முன்னாள் படைவீரர்கள், சுயத்தொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி தேர்வில் தேர்ச்சியடைய நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்களுக்கு மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் பணியிடம் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.