போலீசார் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விடுப்பு பயண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த சலுகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விடுப்பு பயணச் சலங்கை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் விடுப்பு பயண சலுகை அனுபவிக்க விரும்பினால் உயர் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம். மேலும் பயணம் செய்த பிறகு ஒரு மாதத்திற்குள் பயணப்பட்டியல் மற்றும் அசல் பயணச்சீட்டை இணைத்து சலுகை பெறுவதற்கான பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.