போலி மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 20 மாநிலங்களில் இயங்கிவரும் 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் மத்திய & மாநில குழுக்கள் ஆய்வு நடத்தின. இந்த திடீர் சோதனையில் GMP வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத நிறுவனங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா மத்திய மற்றும் மாநில தர கட்டுப்பாட்டு வாரியங்கள் இந்த வருடம் பிப்ரவரியில் நடத்திய சோதனையில், 59 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மருந்து மற்றும் மாத்திரைகளின் தரத்தை சோதிக்கும் விதமாக நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநிலம் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக பிப்ரவரி மாதம் சோதனை நடத்தப்பட்ட நிலையில் 1251 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 59 மருந்துகள் தர மற்றவை என கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.