இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும் 4500 பாலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போப் ஆண்டவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

சுமார் 20 நிமிடங்கள் இருவரும் உரையாடிய நிலையில் உலக அமைதிக்கான பாதையை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம் என்றும் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் போப் ஆண்டவர் கேட்டுக்கொண்டுள்ளார்.