
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் நிலையில், தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகும் விஜய் முழு நேரமாக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகும் இந்த நேரத்தில் நடிகர் விஜயின் மகன் ஜோசப் சஞ்சய் தன்னுடைய கேரியரை சினிமாவில் தொடங்கியுள்ளார். இவருடைய முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் நிலையில் தற்போது படத்தின் மோஷன் பிக்சர்ஸ் வீடியோவை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
A new chapter unfolds 📖 as we welcome our exceptional cast & crew @sundeepkishan 😎 @MusicThaman 🎶 & @Cinemainmygenes ✂️🎞️ on board for JASON SANJAY-01 📚💵
On floors soon… 📽️🎬@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran…
— Lyca Productions (@LycaProductions) November 29, 2024
இந்தப் படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். அந்த வீடியோவில் FORBIDDEN SECRET என்ற புத்தகம் இடம்பெற்றுள்ளது. இந்த புத்தகத்தின் அர்த்தம் தடை செய்யப்பட்ட ரகசியம் என்பதாகும். இதன் காரணமாக படம் ஒரு ரகசியத்தை தேடி செல்லும் க்ரைம் திரில்லர் நிறைந்த படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உச்சத்தில் திகழும் நடிகர் விஜயின் மகன் ஜோசப் சஞ்சய் இயக்கும் படம் என்பதால் மிகுந்த அளவில் எதிர்பார்ப்பு என்பது நிலவுகிறது. இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.