ஆர்.ஜே பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது மட்டுமில்லாமல் ஆர்.ஜே பாலாஜி சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்டார். சொர்க்கவாசல் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த சித்தார்த் விஸ்வநாத் சொர்க்கவாசல் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் ஜெயிலில் நடக்கக்கூடிய கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஆர்.ஜே பாலாஜி வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செல்வராகவன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற 29-ஆம் தேதி சொர்க்கவாசல் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இன்று படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது. தமிழ் சினிமாவில் இதுவரை காணாத சிறையில் நடக்கும் வன்முறை மற்றும் சிறையில் இருந்து தப்பிக்கும் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த படம் இயக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.