தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் வருகிற ஜூன் 5-ம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது விண்வெளி நாயகா பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து மிகவும் வைரலாகி வருகிறது.