தமிழக முழுவதும் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கிய ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் என பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதில் மார்கழி கடைசி நாள் அன்று போகி பண்டிகை கொண்டாடப்படும். இந்த பண்டிகையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நோக்கத்தின் படி பழைய பொருட்களை தீயில் போட்டு மக்கள் எரிப்பது வழக்கம் .

அதனால் காற்று அதிகமான அளவு மாசடையும். இதனை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் வருகின்ற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் தங்களுடைய பயன்பாட்டில் இல்லாத பொருட்களை தவிர்க்க வேண்டும். அத்துடன் டயர், பழைய துணி,பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் ட்யூப் ஆகியவற்றை எரிக்காமல் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து ஆடியோ மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது