இந்தியாவில் மக்களின் வசதிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் இந்திய அரசால் ஆதரிக்கப்படும் ஒரு முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு பல வட்டி லாபத்தை கொடுக்கும். அதன்படி இந்த திட்டம் மூன்று வகையான நன்மைகளைக் கொண்டுள்ளது. அதாவது வரி சேமிப்பு நன்மையை வழங்குகிறது.

முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும். PPF முதலீட்டில் வருமான வரி சட்டத்தில் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும். இந்த திட்டம் உத்திரவாதம் ஆன வருமானத்தை வழங்குவதை தவிர முதலீட்டின் முழு மதிப்பிற்கும் விலக்கு அளிக்கின்றது. மேலும் இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் லாகின் உள்ளது. அதன் பிறகு தான் இதன் முதிர்வு தொகை பயனாளர்களுக்கு கிடைக்கும். இதில் குறைந்தபட்சம் 500 ரூபாய் சேமிப்பாக இருக்க அதிகபட்சம் ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம். குறிப்பாக இந்த திட்டத்தில் 7.1 சதவீதம் பற்றி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.