அமைச்சர் சேகர்பாபு சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அப்போது போதையை ஒழிப்பேன் என்று அன்புமணி ராமதாஸ் சொன்னது பற்றியும் அண்ணாமலை பற்றியும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, முதலில் பாமகவை கட்டுப்படுத்துங்கள். அப்பாவும் மகனும் மேடையிலேயே சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அண்ணாமலை சட்டவிரோத செயல்களை ஆதரிக்கும் கர்நாடக டூப் போலீஸ். அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டது திமுக கூட்டணி அல்ல.

இந்த கூட்டணி மேன்மேலும் வளரும் என்பதற்கு கடந்த 28ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி தான் சான்று. பிரசாந்த் கிஷோர் சாலையில் நடந்து சென்றாலே அவர் யார் என்று தெரியாது என்று கூறினார். மேலும் அண்ணாமலையை டூப் போலீஸ் சென்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்த நிலையில் சம்பந்தமே இல்லாத ஒரு துறையில் அமைச்சராக இருக்கிறார் சேகர் பாபு என்று அதற்கு அவரும் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.