
பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தில் அதில் சுபாஷ் மோடி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு சுபாஷுக்கும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிகிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்தனர். மேலும் நிகிதா உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூரில் இருக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
குழந்தையின் பராமரிப்பு சொல்வதற்காக மாதம் தோறும் 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என சுபாஷுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஒன்பதாம் தேதி பெங்களூரில் இருக்கும் வீட்டில் சுபாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கடந்த 14-ஆம் தேதி அரியானா மாநிலத்தில் பதுங்கி இருந்த நிகிதாவை கைது செய்தனர். மேலும் நிகிதாவின் தாய் நிஷா, அண்ணன் அனுராக் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அதுல் சுபாஷின் தாய் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். மகன் இறந்து போன நிலையில் தனது 4 வயது பேரனை காணவில்லை. எங்கே போனான் என்பது தெரியவில்லை. எனவே பேரனை மீட்டு தருவதுடன் பாதுகாப்பாக இருப்பதையும் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆட்கொணர்வு மனு குறித்து உத்தர பிரதேசம் ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணை ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.