
தமிழில் ஜோதிகாவுடன் 36 வயதினிலே என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் லட்சுமி மஞ்சு. இவர் பெரிய அளவு திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் இவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக சைமா விருது விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார் லட்சுமி மஞ்சு.
இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த ஊடகங்கள் அவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது சிலர் கேமராவிற்கு முன்பாக சென்று கொண்டிருந்தார்கள். அதனால் கடுப்பான லட்சுமி அவர்களை அடிக்க சென்றுள்ளார். இந்த காட்சி பார்த்த தொகுப்பாளர் ஒரு நிமிடம் ஷாக் ஆகி உள்ளார் .அதோடு நடிகைகளுக்கு இப்படியெல்லாம் கோபம் வருமா? என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Hello Durrrrrrr….#lakshmiManchu #ManchuLakshmi #SIIMA2023 #SIIMAAwards2023 #SIIMA #viralvideo #Trending #Memes pic.twitter.com/HMNxbB4UYh
— Coffee in a Chai Cup (@coffeeinachaic1) September 21, 2023