தஞ்சாவூர் மாவட்டம் வளசக்காடு கிராமத்தில் கருணாகரன் அனிதா தம்பதியர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஹரிப்பிரியா (20) என்ற மகள் இருக்கிறார். இதில் அனிதா மற்றும் ஹரிஹரன் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் ஹரிப்பிரியா தன்னுடைய பெரியப்பா வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஹரி பிரியா பிரகாஷால் கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு கடந்த வருடம் பெண் குழந்தை பிறந்த நிலையில் பிரகாஷ் ஹரிப்ரியாவை திருமணம் செய்ய மறுத்ததோடு அது தன்னுடைய குழந்தை இல்லை எனவும் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் ஹரிப்பிரியா புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது பிரகாஷின் டிஎன்ஏவும் குழந்தையின் டிஎன்ஏவும் ஒத்துப்போனதால் பிரகாஷ் தான் குழந்தைக்கு தந்தை என்று தெரிய வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமினில் வெளியே வந்த பிரகாஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்வதாக ஹரி பிரியாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தன்னுடைய பெரியப்பா பாஸ்கருடன் சென்றுள்ளார். அப்போது ஹரிப்பிரியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைப்பதாக காவல்துறையினர் உறுதி கொடுத்ததை அடுத்து ஹரிப்பிரியா அங்கிருந்து சென்றார்.