
ஹிந்தி மற்றும் மராத்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் கிரண் மானே. இவரது தந்தை தின்கர்ராவ் மானே உடல்நல குறைவு காரணமாக தனது 86 வயதில் காலமானார். இதுகுறித்து கிரண் மானே தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தின்கர்ராவ் மானேவின் உடல் சத்தாராவில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறப்பிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்திய வருகின்றனர். இன்று மாலை 6 மணிக்கு மஹுடி கைலாஷ் கல்லறையில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.