
உத்திரபிரதேச மாநிலத்தில் புலாய் பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்தான் பாஜக கட்சியின் மிக வயதான தொண்டர் ஆவார். இவருக்கு 111 வயது ஆகிறது. இவர் கடந்த 1911 ஆம் ஆண்டு ஜன சங்கத்தின் எம்எல்ஏவாக தேர்வானார். கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் அதாவது பாஜகவின் தொடக்க முதல் தொண்டராக இருந்து வந்தவர்.
இருமுறை எம்எல்ஏ பதவி வகித்துள்ளார். கொரோனா சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி இவரை நலம் விசாரித்ததால் பிரபலமானார். மேலும் தற்போது வயது மூப்பின் காரணமாக இவர் உயிரிழந்துவிட்டார். இவருடைய மறைவுக்கு பாஜகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.