அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது கடலூர் வடக்கு மாவட்டம் பண்ருட்டி நகர பொருளாளர் எல் முருகன், சிவகாசி வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஆர். கொப்பையன், புதுக்கோட்டை கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் எம்.ராஜூ ஆகியோர் மரணம் அடைந்தனர்.

இவர்களது மறைவு செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்ததாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மேலும் அவர்களை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்.