
இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா முந்தைய எச்சரிக்கையில், ஈரான் இஸ்ரேலுக்கு எதிரான பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தெரிவித்திருந்தது. அதன் பின்னர், ஈரான் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதல் ஈரானின் இஸ்பஹான், தப்ரிஸ், கராஜ் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து நடத்தப்பட்டது. ஏவுகணைகள் இஸ்ரேலில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இஸ்ரேல் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்தனர். மக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் அரசாங்கம் அவசர நிலைமைகளை அறிவித்து, பாதுகாப்பு முறைகளை வலுப்படுத்தியுள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையேயான நிலைமைகள் மேலும் கடுமையாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.