
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தற்போது தமிழ்நாட்டின் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளர். இவர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். இவர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்ட நிலையில் பின்னர் 2009 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியானர். இவர் ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய நிலையில் பின்னர் இமாச்சல் பிரதேசத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இதைத்தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் தான் சந்தித்த பல வழக்குகளில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். மேலும் இவர் தற்போது பணி ஓய்வு பெற்ற நிலையில் அவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.