இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள 2 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் ‘லக்பதி திதி’ திட்டத்தை அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு பிளம்பிங், எல்இடி பல்ப் தயாரித்தல், ட்ரோன் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் போன்ற திறன்களில் பயிற்சி அளிக்கப்படும். மகளிர் சுயஉதவிச் சங்கங்களின் உதவியுடன் 2 கோடி கிராமப்புற பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.