பேங்க் ஆப் பரோடா நிறுவனத்தின் துணை நிறுவனமான  BOBCARD  லிமிடெட் சர்வதேச மகளிர் தினத்திற்காக பெண்களுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை மார்க் 31ஆம் தேதி வரை பெண்கள் பெற்றுக்கொள்ளலாம். அமேசான் ஃப்ளிப்கார்ட், ரிலையன்ஸ். டிஜிட்டல் ஏர் இந்தியா போன்ற முக்கிய இ-காமெர்ஸ் தளங்களில் கிடைக்கும் சலுகைகள் மார்ச் 31 வரை மட்டுமே உண்டு. விமானங்கள், ஹோட்டல்கள், எலக்ட்ரானிக்ஸ், நகைகள் மற்றும் பல வகைகளில் பெரும் தள்ளுபடி இதன் மூலமாக கிடைக்கிறது.

உங்களிடம் இந்த  BOBCARD இருந்தால் உங்களுக்கு பிடித்த பொருட்களில் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம். உள்நாட்டு விமானங்களில் ரூ.500 வரை தள்ளுபடி மற்றும் சர்வதேச விமானங்களில் ரூ.2,000 வரை தள்ளுபடி, விமானங்கள், ஹோட்டல்கள் முன்பதிவுகளில் 35% வரை தள்ளுபடி (EMI பரிவர்த்தனைகளுக்கு மட்டும்), ஹோட்டலில் தங்குவதற்கு ரூ. 3,000 தள்ளுபடி (குறியீடு: BOBVIP), சூரத் டயமண்ட் நகைகளை வாங்கினால் ரூ.5,000 வரை தள்ளுபடி. (குறியீடு: BBCRDS2552517385), அமேசானில் 7.5% உடனடி தள்ளுபடி + EMI இல் கூடுதல் ரூ. 1,000 தள்ளுபடி (ஒரு கார்டுக்கு அதிகபட்சம் ரூ. 2,750) கிடைக்கும்.