மத்திய மாநில அரசுகள் பெண்களுடைய நலனை கருத்தில் கொண்டு தொழில் தொடங்க கடனுதவி அளித்து வருகிறது. அந்தவகையில் வர்த்தகம் செய்ய விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் திட்டத்தை யூனியன் வங்கி செயல்படுத்தி வருகிறது. ‘யூனியன் நாரி சக்தி எஸ்டிபி’ திட்டத்தில் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

21 முதல் 65 வயது வரை உள்ள பெண்கள் இதற்குத் தகுதியுடையவர்கள். தொழிலில் பெண்களுக்கு அதிக பங்கு இருக்க வேண்டும். கடனை 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். இதற்காக யூனியன் வங்கியை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு https://msme.unionbankofindia.co.in/#/nari-shakti-main என்ற இணைப்பில் சென்று சரிபார்க்கலாம்.