யுபிஐ செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கு தற்போது முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது phonepe, google pay ,போன்ற அனைத்து வங்கி மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளும் கடந்த ஒரு வருடத்தின் செயல்படாத யுபிஐ ஐடிகளுடன் வேலை செய்வதை நிறுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தாவது கடந்த ஒரு வருடத்தில் எந்த பரிவர்த்தனையும் செய்யாத அனைத்து ஐடிகளையும் பிளாக் செய்யுமாறு அனைத்து வங்கிகள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கும் இந்திய தேசியக்கொடுப்பனவு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு டிசம்பர் 31 வரை காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே நீண்ட காலமாக நீங்கள் யூபிஐ மூலமாக எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால் உடனடியாக அந்த வேலையை முடிக்க வேண்டும். இல்லை என்றால் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு உங்களுடைய யுபிஐ ஐடி மூடப்படும். செயல்படுத்தப்படாத ஐடி ஏதாவது உங்களிடம் இருந்தால் அதை செயல்படுத்த வேண்டும். இருப்பினும் அந்த ஐடியை  கேன்சல் செய்வதற்கு முன்பாக வங்கி உங்களுக்கு மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலமாக எச்சரிக்கை அனுப்பும். UPI பரிவர்த்தனைகளை முன்பை விட பாதுகாப்பானதாக மாற்று நோக்கம் மற்றும் தவறான பரிவர்த்தனைகளை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.