தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கான ஆயிரம் உதவி தொகை திட்டம் அல்லது செப்டம்பர் 15ஆம் தேதியில் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.63 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த திட்டம் தொடங்குவதற்கு இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விண்ணப்பத்தை சரிபார்க்கும் பணியானது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த மாத இறுதிக்குள் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த உரிமை தொகையை பெற தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்  நாளை செப்.1ம் தேதி முதல்வர் முன் ரூ. 1000 தொடர்பான அனைத்து கோப்புகளும் இருக்க வேண்டும். இதனால், இன்று தமிழகம் முழுவதும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கும் பணி நடைபெறுகிறது.