பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில் தற்போது புஷ்பா 2 உருவாகி வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் நிலையில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் நிலையில் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாடலான Couple Song-ஐ படக்குழு வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடல் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகாவின் ஒத்திகை நடனத்தில் உருவாகியுள்ள நிலையில் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.