நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வீடுகளுடைய விலையானது அதிகமாக உயர்ந்துள்ளது. 2023 24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வீடுகள் விலை உயர்ந்துள்ளது. 43 நகரங்களில் வீடுகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது . அதே நேரத்தில் 7 நகரங்களில் வீடுகளின் விலை சற்று குறைந்துள்ளது. முன்ப அகமதாபாத்தில் வீடுகளின் விலையில் 9.1% வளர்ச்சியும், பெங்களூருவில் 8.9%, கொல்கத்தாவில் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல சென்னையில் 1.1% டெல்லியில் 0.8 சதவீதம், மும்பையில் 2.9% வீடுகளின் விலை வளர்ச்சி கண்டுள்ளது. தற்பொழுது குருகுராம் நகரத்தில் அதிகபட்சமாக 20.1% அதிகரித்துள்ளது. அதேபோல லூதியானாவில் அதிகபட்ச சரிவு ஏற்பட்டதாக இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. வீடுகளின் விலை உயர்ந்ததால் வீடு வாங்கும் திட்டத்தில் இருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.