ரேஷன் கார்டு என்பது ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் வழங்கப்படும். இதன் மூலமாக மலிவு விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது, அதன் மூலமாக பல பலன்களையும் பெறலாம். ஒருவேளை புதிய ரேஷன் கார்டு பெற விரும்பினால் வீட்டில் இருந்து கொண்டே புதிய ரேஷன் கார்டு வாங்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

வறுமைக்கோட்டிற்குக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் பத்தாயிரத்து குறைவாகவும், நகர்புறங்களில் 15 ஆயிரத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். அதைவிட அதிகமாக இருக்கக்கூடாது. மேலும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரி சான்று, வருமான சான்று, சிலிண்டர் பில் போன்றவை தேவை. ஒவ்வொரு மாநிலத்திலும் ரேஷன் கார்டு உருவாக்க தனி போர்டல் உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.