
தமிழ் சினிமாவில் இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது LIK என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் நடிகை நயன்தாராவின் கணவர். இவர் சமீபத்தில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை நேரில் சந்தித்தார். அதாவது புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலை விலைக்கி கேட்பதற்காக தான் விக்னேஷ் சிவன் அமைச்சரை சென்று சந்தித்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தன்னுடைய படப்பிடிப்பின் சூட்டிங் நடத்துவதற்கு அனுமதி கேட்க தான் அங்கு சென்றதாக பின்னர் தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது இது தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக கூறியதாவது, புதுச்சேரி விமான நிலையத்தை பார்வையிட்டு அங்கு LIK படப்பிடிப்பை நடத்த அனுமதி கேட்பதற்காக தான் புதுச்சேரிக்கு சென்றேன். அப்போது மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோரை நேரில் சென்று சந்தித்தேன். அந்த சமயத்தில் என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் ஒருவர் அவருக்கு தேவைப்படும் விஷயம் தொடர்பாக பேசினார். இந்த நிகழ்வு தவறுதலாக என்னுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது. இது தொடர்பாக பகிரப்படும் மீம்ஸ் மற்றும் ஜோக்குகள் நகைச்சுவையாக இருக்கிறது. ஆனால் இது தேவையற்றது கூறியுள்ளார். மேலும் அரசு சொத்தை விலைக்கு கேட்டதாக வெளிவந்த தகவலை விக்னேஷ் சிவன் மறுத்துள்ளார்.