இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் புதிய வகை மோசடி நடைபெற்றுள்ளது.

ஊருக்கு புதிதாக குடியேறிய கவுரவ் ஜோஷி. ஆன்லைனில் புரோக்கரை பிடித்து வீடு பார்க்க சொல்லியிருக்கிறார். வீடு ஓகே ஆன பின்னர் அட்வான்ஸ் கொடுக்கும்போது ரீஃபண்ட் கூப்பன் ஒன்றை புரோக்கர் ஜோஷியிடம் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். ஆனால் அதனை ஸ்கேன் செய்தபின்னர் ஜோஷியின் வங்கிக் கணக்கில் இருந்து 1.15 லட்சம் சுரண்டப்பட்டிருக்கிறது