பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழா தமிழா என்னும் விருதுகள் வழங்கும் விழா நடந்துள்ளது. அதில் பழங்குடியின நபர் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் பழங்குடியின மக்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் ? என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு இன்றுவரை எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை. பிறப்பு சான்றிதழ் என்பது அடிப்படையான ஒன்று. அதற்கே சிரமப்பட்டு தான் கொண்டிருக்கிறோம். நான் இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கி கொடுத்திருக்கிறேன்.

ஆனால் எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை அதற்காக நடையாய் நடந்து கொண்டிருக்கிறோம் நாளொன்றுக்கு 20 கிலோ மீட்டருக்கு மேல் காடுங்களியாக  நடந்து செல்கிறேன் என குறிப்பிட்டார். இந்நிலையில் அவர் உதவி செய்த நபர்களில் ஒருவர் அந்த மேடைக்கு வந்து காடு மேடுகளில் சுற்றி திரிந்து இல்லாத ஏழைகளுக்கு பல உதவிகளை அவர் செய்திருக்கிறார்.

ஆனால் அவருக்கே நியாயமாக கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. அவருக்கு நான் ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன் என நல்ல காலனி ஒன்றை அவருக்கு பரிசாக வாங்கி வந்து அவரே அதை அவர் காலில் போட்டும் விட்டார்.  நல்ல குணம் கொண்ட அந்த எளிய மனிதரை தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.