ஆதார்:

நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஆதார் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கட்டாயம் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது  அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் சரிபார்ப்பு:

இந்த நிலையில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கும்போது ஆதார் எண்ணை கட்டாயம் சரிபார்த்து பதிவேற்றம் செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பிறப்பு சான்றிதழுக்கு தாய், தந்தையின் ஆதார் எண்ணும், இறப்பு சான்றிதழ் வழங்கும்போது உயிரிழந்தவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களையும் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.