
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை களம் காண்கிறார்.
இந்த தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும் மற்றும் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை தொகுதி பிறந்தநாள் கொண்டாடும் அண்ணாமலைக்கு பரிசாக கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அண்ணாமலையின் பிறந்தநாளில் கோவை தொகுதியில் இன்று அவருக்கு வெற்றியா தோல்வியா என்பது இன்றே தெரிந்துவிடும்.