
தனது சகோதரர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா அணிந்த நகை குறித்த தகவல் வெளியாகி ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. கடந்த 2002ஆம் வருடம் வெளியாகி ஹிட் கொடுத்த இந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு தமிழ் பக்கம் வராத இவர் பாலிவுட் பக்கம் திரும்பி முன்னணி ஹீரோயினாக வளம் வந்தா . தமிழ் மொழி மட்டுமல்லாமல் மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் சில படங்களில் நடித்தார்.
இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல பாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் பிரியங்கா சோப்ராவின் சகோதரர் சித்தார்த் சோப்ராவிற்கு திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்தில் பிரியங்கா சோப்ரா அணிந்த நகை குறித்த செய்தி தான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது .
அதாவது 1600 மணி நேரம் என்றால் கிட்டதட்ட 67 நாட்கள் மரகதம் மற்றும் வைரம் கொண்டு செய்யப்பட்ட நகையை தான் பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கிறார். அந்த நெக்லஸின் விலை கிட்டத்தட்ட 12 கோடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.