பிரபல நடிகரும் நடன கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சினது சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது . இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கு பெற்று மிகுந்த உற்சாகத்து நடன நிகழ்ச்சியை கண்டு கழித்தார்கள். அவர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக பிரபுதேவா அசத்தலாக நடனம் ஆடினார். இதில் நடிகர்கள் தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே சூர்யா, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பிரபு தேவா தான் நடித்து நடன இயக்குனராக பணியாற்றிய பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ரசிகரக்ள் தங்களின் செல்போனில் டார்ச் லைட் அடித்து பிரபுதேவாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தார்கள். இதனையடுத்து ரவுடி பேபி பாடலுக்கு நடிகர் தனுஷும், காத்தடிக்குது பாடலுக்கு நடிகர் எஸ் ஜே சூர்யாவும் பிரபுதேவா உடன் இணைந்து நடனம் ஆடியது பலரையும்  கவர்ந்தது.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.,