பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் எந்திரன் 2.0 திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது ஹவுஸ்புல் 5 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று திடீரென படப்பிடிப்பில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

அவருடைய கண்ணில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடிகர் அக்ஷய் குமாருக்கு சிகிச்சை வழங்கினர். மேலும் இதைத் தொடர்ந்து நடிகர் அக்ஷய் குமாரை சில காலங்களுக்கு ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.