
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன் லால். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தன்னுடைய 360 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தருண் மூர்த்தி இயக்குகிறார். இந்த படத்திற்கு தற்போது எல்360 என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் சூட்டிங் கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்ற போது ஒரு வயதான ரசிகர் நடிகர் மோகன்லாலை சந்திக்க வந்தார். அப்போது அந்த ரசிகர் படப்பிடிப்பு முடிந்து விட்டதா என மோகன்லாலிடம் கேட்டார். அதற்கு அவர் இல்லை. எங்களை அனுப்ப நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா என நகைச்சுவையாக கேட்டார். அதோடு எனக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்றும் கேட்டார். அதற்கு அந்த ரசிகர் வாத்து கறி என்று கூறுகிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
#L360 location ♥️ pic.twitter.com/ALoXsLuDc2
— AB George (@AbGeorge_) June 21, 2024