தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வரும் நிலையில் தமிழில் பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஹிந்தியில் யுத்ரா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் நிலையில் இந்த படம் வருகிற 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் சித்தாந்த் சதுர்வேதி ஹிரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து சாடியா என்ற பாடல் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது மாளவிகா கவர்ச்சியான மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது குறித்து தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, சாடியா பாடல் சூட்டிங் சமயத்தில் மிகவும் சிரமப்பட்டோம். ஏனெனில் நாங்கள் கடற்கரை அருகில் இருந்ததால் மிகவும் குளிராக இருந்தது. அப்போது முத்த காட்சிகளில் நடிக்க வேண்டிய இருந்தது. இந்த காட்சிகள் முடிந்து விட்டதா என்று கேட்டுக்கொண்டே இருந்தோம். நான் சேலை மற்றும் பிகினி அணிந்திருந்தேன். சித்தார்த் வெள்ளை நிற சட்டை அணிந்து இருந்தார். குளிர் காரணமாக அந்த காட்சிகளில் நடிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. மேலும் எனக்கு பிடித்த நடிகர் நடிகைகள் இதே போன்ற காட்சிகளில் நடித்துள்ளதை பார்த்து வளர்ந்தவள் என்று கூறினார்.