தமிழ் சீரியல்களில் பிரபல நடிகராக இருந்தவர் சஹானா ஸ்ரீதர். இவர் வள்ளி வேலன், தாமரை, சித்தி 2 உள்ளிட்ட பல தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அழியாத கோலங்கள், ராஜ வம்சம் மற்றும் விஐபி 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை தியாகராய நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இன்று மாலை திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவரை உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மேலும் அவருக்கு 62 வயது ஆகும் நிலையில் தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.