பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சன்னிலியோன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் ஓ மை கோஸ்ட், வடகறி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். முதலில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் ஆபாச நடிகையான அவரை நடிக்க வைக்க கூடாது என சில கவர்ச்சி நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோனுக்கு தற்போது கேரளாவில் நடனமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அங்குள்ள ஒரு பல்கலைக்கழக என்ஜினியர் கல்லூரி வளாகத்தில் ஜூலை 5ஆம் தேதி சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அனுமதி மறுத்து கேரள பல்கலைக்கழகத் துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்கு முன்பு பெங்களூரில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியிலும் சன்னி லியோனுக்கு நடனமாட தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.