தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றி மாறன். இவர் விடுதலை என்ற திரைப்படத்தை தற்போது எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் பிபிசி ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்ட வெற்றிமாறன் அந்த நிகழ்ச்சியின் போது பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, ஒரு விமர்சனம் வரும்போது அதை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயக போக்கு, ஜனநாயக அமைப்பு.

ஆனால் அந்த விமர்சனத்தை எதிர்ப்பது, நமக்கு எதிராக விமர்சனங்கள் வரும்போது அதை ஒடுக்க நினைப்பது, விமர்சிப்பவர்களை குற்றவாளிகளாக்குவது, விமர்சனத்தை முன் வைப்பவர்களை தேச விரோதிகள் ஆக்குவது என்பது பாசிசத்தின் அடையாளங்கள். தற்போது திரையிடப்படும் ஆவண படத்தை பார்ப்பது என்பது பாசித்ததற்கு எதிரான ஒன்றாக தான் நான் பார்க்கிறேன். இதனை பகிர்வதும் பாசிசத்திற்கு எதிரான செயல்பாடு தான். மேலும் இந்த ஆவண படத்தை தமிழில் கொடுத்ததற்காக விசிக-வுக்கு நன்றி என்று கூறினார்.