தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். இவர் தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என்ற பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில் நெல்சன் தயாரிக்கும் முதல் படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி பிளடி பெக்கர் என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தை சிவபாலன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை பட குழு வெளியிட்டுள்ள நிலையில் அதில் இயக்குனர் நெல்சன், நடிகர் கவின், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நகைச்சுவையாக நடித்துள்ளனர்.