
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் ஒரு டீம் ஆகவும், பெண்கள் ஒரு டீமாகவும் விளையாடுகின்றனர். முதலில் ரவீந்தர் எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த வாரம் அன்சிதா, அருண் பிரசாத், தர்ஷா, ஜாக்லின், முத்து, பவித்ரா ஜனனி, சத்யா சௌந்தர்யா ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். பெண்கள் டீமில் இருந்து தான் இந்த வாரம் ஒருவர் வெளியேறப் போவதாக கூறப்படுகிறது. அநேகமாக பவித்ரா, தர்ஷா, சௌந்தர்யா ஆகிய மூன்று பேரில் யாராவது ஒருவர் தான் எலிமினேட் ஆக வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.