ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக 8 வாரங்களில் முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த நவம்பர் 22 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக் பாக்கெட்’ என ராகுல் காந்தி கீழ்த்தனமாக விமர்சனம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த விவகாரத்தில் தான் தேர்தல் ஆணையம் 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மோடி என்கிற பெயர் இருந்தாலே மோசடி பேர்வழிகள் என ராகுல் காந்தி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதன் காரணமாகத்தான் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. நீரவ் மோடி, லலித் மோடி போன்ற பல மோசடி பேர்வழிகள் இருக்கிறார்கள்.. ஆகவே மோடி என்றாலே மோசடி பேர்வழி தானா என ராகுல் காந்தி போது கூட்டத்தில் சர்ச்சையாக பேசி இருந்தார்.

அது குறித்து குஜராத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன் காரணமாக அவர் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டி இருந்தது. ஏனென்றால் அந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதால் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் அந்த தீர்ப்புக்கு தடை பெற்றதன் காரணமாகத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை திரும்ப பெற்றார்.

இந்த நிலையில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் தரமற்ற விமர்சனம் செய்துள்ளார். பிக் பாக்கெட் என அவர் நாட்டின் பிரதமரை குறிப்பிட்டது நல்ல செயல் அல்ல, ஏற்கத்தக்கதல்ல என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நாங்கள் சட்டம் இயற்ற முடியாது, நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுத்து 8 வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் மீண்டும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் அல்லது அவர்கள் நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது..