நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மார்ச் மாதம் ஹோலி பண்டிகைக்கு முன்பாக 13வது தவணை பணம் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் பிப்ரவரி 24ஆம் தேதி பி எம் கிஷான் 13 வது தவணைத் தொகை விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக அரசு இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.