நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14 தவணை நிதி உதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் 15 வது தவணை பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் 15 ஆவது தவணை படம் இந்த மாதம் இறுதியில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பணத்தை பெறுவதற்கு விவசாயிகள் கட்டாயம் இ கேஒய்சி செயல் முறையை செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலில் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/  என்ற பக்கத்திற்கு சென்று டாஷ்போர்ட்டில் உள்ள முழு விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களின் மாவட்டம் மற்றும் பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்தையும் தேர்வு செய்து e-kyc செயல் முறையை எளிதில் முடித்து விடலாம்.