கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படாவிட்டால் மாநிலம் முழுவதும், பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் முடிவு செய்துள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அதாவது அதிகபட்ச கொழுப்பு 5.9%, இதர சத்துகள் 9.0% உள்ள பாலுக்கு ரூ.40.95 கொள்முதல் விலை வழங்கப்பட்டு வந்தது. பாலின் விலைய தரத்துக்கு ஏற்ப பிரித்து 6.0, 6.1, 6.2, 7.5 என தரப்பட்டியலை உயர்த்தி உச்சபட்சமாக 7.5% வரை பால் கொள்முதல் விலைப்பட்டியல் விரிவாக்கம் செய்துள்ளது.