
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் டன்கி என்ற படம் வெளியானது. நடிகர் ஷாருக்கானுக்கு தற்போது 58 வயது ஆகும் நிலையில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது.
அதாவது ஸ்விட்சர்லாந்தில் 77-வது லோகார்னோ திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இந்த விழா ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவின்போது பெருமைமிகு வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்படும். மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற இருக்கும் நடிகர் ஷாருக்கானுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்