
பிரபல மலையாள நடிகர் எடவேல பாபு பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில், கேரள காவல்துறை சிறப்பு குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், பாபுவை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்முறை குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கெனவே எர்ணாகுளம் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றிருப்பதால், அவரை விடுவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவுகிறது