திருவண்ணாமலை அருகே சோ.கீழ்நாச்சிப்பட்டில் உள்ள தனலட்சுமி நகர் பகுதியில் மசாஜ் சென்டரை இயக்கி வந்த அஜித் (27) மீது மூவர் பாலியல் தொழில் நடப்பதாக குற்றம் சாட்டி, ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரும் அஜித்திடம் பணம் கேட்டு மிரட்டி, அஜித் மறுத்ததும், அவருடைய பைக்கை பறித்து தப்பியோடினர்.

சம்பவத்தை அடுத்து, அஜித் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் , திருவண்ணாமலையை சேர்ந்த மூர்த்தி (42), உதயகுமார் (22), பாபு (22) ஆகியோர் பணம் கேட்டு மிரட்டியதும், பைக்கை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.